ADB வழங்கும் கடன் திட்டம்



விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில்கள், கடற்றொழில், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் சாதாரண மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு, சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி நோக்க வியாபாரங்கள் என்பவற்றிற்கு ஊக்கமளிப்பதற்காக, பொருளாதார மற்றும் நிதி ரீதியில் சாத்தியமான வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவிடன் வழங்கப்படும் கடன் திட்டம்.

கடன் திட்டம்

  • பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சிகள் - ரூ.30,000,000/-
  • வருடாந்த வட்டி வீதம் - ஆண்டுக்கு 14%
  • ஆகக்கூடிய மீளளிப்புக் காலம்
  • செயற்படு மூலதனத்திற்கு ஆகக்கூடியதாக 24 மாதங்கள்
  • ஏனைய வேலைத்திட்டங்களுக்கு 120 மாதங்கள் வரை
  • தகுதியுள்ள துறைகள் - விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில்கள்,கடற்றொழில்,அலங்கார மீன் வளர்ப்பு மற்றும்  சாதாரண மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு,சுற்றுலா,ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் கைத்தொழில்கள்
  • பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படும் மானியம் –
  •     பிரதான கடன் தொகையிலிருந்து 10% மானியம்
  •     தொடர்புடைய பயிற்சியைப் பூர்த்திசெய்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதான கடன் தொகையிலிருந்து மேலும் 10%
  •     ஊவா,சபரகமுவ,வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதான கடன் தொகையிலிருந்து மேலும் 5%
  • மேற்படி மானியத்திற்கான நிபந்தனைகள்
    •     கடன் தொகை ரூ.750,000 க்கு அதிகமாக இருக்க வேண்டும்
    •     தொழில் முயற்சியின் உரிமையில் குறைந்தபட்சம் 51% பெண்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
    •     தொழில் முயற்சியின் உரிமையில் குறைந்தபட்சம் 20% பெண்ணின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், ஒரு பெண்ணே பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பிரதம செயற்பாடுகள் அதிகாரி      பதவியை வகிக்க வேண்டும். அத்துடன், சபை ஒன்று இருக்குமானால் சபைஅங்கத்தவர்களில்குறைந்த பட்சம் 30% பெண்களாக இருக்க வேண்டும்.

தகுதியுள்ள வேலைத்திட்டங்கள்

  • புதிதாக ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டங்கள்
  • விரிவாக்கங்கள் / வேலைத்திட்ட நவீனமயப்படுத்தல்கள்
  • நிரந்தர செயற்படு மூலதனத்திற்கு நிதியளித்தல்


தகுதியுள்ள செலவினங்கள்

  • சீரமைப்புக் கட்டுமானங்கள் மற்றும் பூர்த்தி செய்தல் 
  • ஆலைகள், இயந்திரங்கள் மற்றும் ஏனைய நிலையான சொத்துகளின் கொள்வனவு
  • வணிக நோக்கங்களுக்கான மோட்டார் வாகனங்களின் கொள்வனவு
  • நிரந்தர தொழிற்படு மூலதனத் தேவைகள்


மேலதிக விபரங்களுக்கு 011 200 88 88 என்ற தொலைபேசி இலக்கத்தினூடன் தொடர்புகொள்ளவும்.